புற்றுநோயிலிருந்து மீளும் பயணம் கடினமானது” - தனது அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா - Yarl Voice புற்றுநோயிலிருந்து மீளும் பயணம் கடினமானது” - தனது அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா - Yarl Voice

புற்றுநோயிலிருந்து மீளும் பயணம் கடினமானது” - தனது அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா



தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமான இன்று, "இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர்" என்று, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக மனிஷா கொய்ராலா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். 

இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். 

அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.

 நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்," என்று கூறியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார். அவர் தனது சுயசரிதையான ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்ற புத்தகத்தை ஜனவரி 8, 2018 அன்று மும்பையில் வெளியிட்டார்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்து வெளிவருவதைப் பற்றி அவர் தனது புத்தகத்தில் எழுதியிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post