ஈழத் தமிழ் இயக்கத்திற்கு தொண்டாற்றிய புலமையாளர்கள் கௌரவிப்பு - Yarl Voice ஈழத் தமிழ் இயக்கத்திற்கு தொண்டாற்றிய புலமையாளர்கள் கௌரவிப்பு - Yarl Voice

ஈழத் தமிழ் இயக்கத்திற்கு தொண்டாற்றிய புலமையாளர்கள் கௌரவிப்புஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும்,தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழத் துறையினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 

யாழ். பல்கலைக்கழகத் தமிழத் துறையின் ஏற்பாட்டில் இன்று காலை ஆரம்பமாகிய  இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் போதே இவர்கள் கொளரவிக்கப்பட்டுள்ளனர். 

பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை, பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை, பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, பண்டிதர் ம.ந. கடம்பேஸ்வரன், பண்டிதர் வீ. பரந்தாமன், பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு ஆகிய ஏழு புலமையாளர்களே கௌரவிக்கப்பட்டனர்.  

இவர்களில் மூன்று பேர் இன்றைய சூழ்நிலை காரணமாக நிகழ்வுக்கு வரமுடியாத காரணத்தினால், அவர்கள் வருகை தராத நிலையில் அவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post