இலங்கையின் வடபகுதி கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வடக்கு மீனவர் தரப்பில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையிலான கலந்துரையாடல் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகளான, வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் N.V. சுப்பிரமணியம், உப தலைவர் J. பிரான்சிஸ், பொருளாளர் A. மரியராசா, தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் V.அருள்நாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Post a Comment