வாரத்திற்கு இரு தடவை சிறைக் கைதிகளை பார்வையிட விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
கொவிட் -19 தொற்று நோயால் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே கைதிகளை பார்வையிட விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையில் இருந்து ஒரு வாரத்திற்கான உணவு மற்றும் சுகாதார உற்பத்திகளை பெற்றுக் கொள்ள சந்தேகநபர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment