ஜெய் பீம்’ ரியல் நாயகிக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்; - Yarl Voice ஜெய் பீம்’ ரியல் நாயகிக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்; - Yarl Voice

ஜெய் பீம்’ ரியல் நாயகிக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்;



ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள ராஜாகண்ணு மற்றும் செங்கேனி கதையின் ரியல் நாயகிக்கும் உதவ முன்வந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

கோலிவுட்டில் நல்ல கமர்ஷியல் நடிகராகவும் இயக்குநராகவும் இருந்து வரும் ராகவா லாரன்ஸ், தமிழக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த வாரத்தில் இருந்து பேசு பொருளாகியிருக்கும் ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள ராஜாகண்ணு மற்றும் செங்கேனி கதையின் ரியல் நாயகிக்கும் உதவ முன்வந்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவாக சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

 தொடர்ந்து பலரின் பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தின் கதையின் உண்மை நாயகி பார்வதி அம்மாளின் தற்போதைய நிலைப்பற்றி அறிந்த நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

இது குறித்த ராகவா லாரன்ஸின் அறிவிப்பில், “செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன்.

பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.

 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா, ஜோதிகாவுக்கும் இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்”. என குறிப்பிட்டுள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு வாழ்த்திய அனைவரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நிலையில் லாரன்ஸின் இந்த முன்னெடுப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post