சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் ஜடேஜா? - ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்பட்டதன் காரணம் இதுதானா? - Yarl Voice சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் ஜடேஜா? - ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்பட்டதன் காரணம் இதுதானா? - Yarl Voice

சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் ஜடேஜா? - ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்பட்டதன் காரணம் இதுதானா?



முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் ரவீந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டது, சிஎஸ்கே அணியில் தோனி ஓய்வுபெற்ற பிறகு அடுத்த கேப்டனாக  ஜடேஜா நியமிக்கப்படுவார் என்பதற்கான அறிகுறிதான் இது.
 
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று (நவ.30) கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.

 அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் தோனியை விட அந்த அணியைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா அதிக விலைக்குத் தக்க வைக்கப்பட்டுள்ளார். ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், தோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைத்துள்ளது அணி நிர்வாகம். இந்த 4 வீரர்களைத் தக்கவைக்க ரூ.42 கோடி செலவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதுகுறித்துப் பேசிய ராபின் உத்தப்பா, ''முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் ரவிந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுப்பெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படுவார் என்பதற்கான அறிகுறிதான் இது. சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் மதிப்பு தோனிக்கு நிச்சயம் தெரியும்'' என்றார் அவர்.

பார்த்தீவ் படேல் கூறுகையில், ''ஜடேஜா சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக உரிமையாளரால் பார்க்கப்படுகிறார். ஒரு வீரராக ஜடேஜா அசத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் 6வது இடத்தில் பேட்டிங் செய்வதைப் பார்த்தோம். ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை பார்க்க விரும்புகிறேன். 

தோனி விளையாடுவதில்லை என்று முடிவு செய்தவுடன் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்பார் என நான் நினைக்கிறேன்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post