அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - Yarl Voice அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - Yarl Voice

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புஇலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (01) உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள், எயிட்ஸை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்´ என்பதுதான் இவ்வாண்டு எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.

2020 ஆம் ஆண்டில், நாட்டில் 363 புதிய எயிட்ஸ் நோயாளிகள் இனங் காணப்பட்டதாகவும் 2019 இல் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 439 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா-19 தொற்றுநோயைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் எயிட்ஸ் பரிசோதனைகள் தோல்வியடைந்ததன் காரணமாக 2019 ஆம் ஆண்டை விட 2020 இல் பதிவான நோயாளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எயிட்ஸ் பரவ முக்கிய காரணம் பாதுகாப்பற்ற பாலுறவு என அடையாளம் காணப் பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் ஆண் ஓரினச்சேர்க்கை காரணமாக எச்.ஐ.வி. அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது என்று தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானவை ஆண்கள் என்றும் 5 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் தெரியவந்துள்ளது.

தற்போதைய சிகிச்சையின் மூலம், எய்ட்ஸ் ஒரு நீண்ட கால நோயாக மாறியுள்ளது.

இலங்கையில் எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் பராமரிப்பு சேவைகள் நாடு முழுவதும் நிறுவப்பட்ட 41 STD கிளினிக்குகளால் வழங்கப்படுகின்றன.

எச்.ஐ.வி பரிசோதனை செய்ய விரும்பும் எவரும் www.know4sure.lk இல் சந்திப்பைப் பதிவு செய்யலாம்.

மேலதிக தகவல்களை 0703 633 533/0112 667 163 என்ற தொலைபேசி இலக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் எச்.ஐ.வி. சுய பரிசோதனையை 0716 379 192 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post