பாடசாலைகள் தொடங்குவது மற்றும் பரீட்சைகள் நடத்துவது குறித்த அண்மைய அறிவிப்பு - Yarl Voice பாடசாலைகள் தொடங்குவது மற்றும் பரீட்சைகள் நடத்துவது குறித்த அண்மைய அறிவிப்பு - Yarl Voice

பாடசாலைகள் தொடங்குவது மற்றும் பரீட்சைகள் நடத்துவது குறித்த அண்மைய அறிவிப்பு




2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (19) பாடசாலைகள் ஆரம்பம் மற்றும் பரீட்சைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெளிவுபடுத்தினார்.

எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைவதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடைபெறும். உயர்தர பரீட்சை பெப்ரவரியில்  ஆரம்பமாகி நிறைவடையும். 

பரீட்சைகள் திணைக்களம்  க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மே மாதம் ஆரம்பமாகி ஜூன் நடுப்பகுதிக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

“முதலாம் வகுப்பு அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் மாதம் தொடங்கும். தற்போது அந்தச் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் படுகின்றன. இது பெற்றோருக்கு ஒரு வாய்ப்பு”  என அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post