மியன்மாரில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தது இராணுவம் - வீடியோக்கள் படங்களை வெளியிட்டது பிபிசி - Yarl Voice மியன்மாரில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தது இராணுவம் - வீடியோக்கள் படங்களை வெளியிட்டது பிபிசி - Yarl Voice

மியன்மாரில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தது இராணுவம் - வீடியோக்கள் படங்களை வெளியிட்டது பிபிசி



மியன்மார் இராணுவம் ஜூலை மாதத்தில் 40க்கும் அதிகமான பொதுமக்களை சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளமை பிபிசியின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கிராமத்தவர்களை சுற்றிவளைத்த படையினர் ஆண்களை தனியாக பிரித்து அழைத்து சென்று படுகொலை செய்தனர் என சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
17 -18 வயது இராணுவத்தினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மியன்மார் படையினர் அவர்களை சித்திரவதை செய்து  ஆழமற்ற புதைகுழிகளில் புதைத்ததை காண்பிக்கும் வீடியோக்கள் படங்களும் வெளியாகியுள்ளன.
ஜூலை மாதம்  கனி என்ற நகரத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய மியன்மாரின் சகாய்ங்மாவட்டத்தில் உள்ள இந்த பகுதியில்படையினருக்கு கடும் எதிர்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கனி நகரில் இராணுவத்தினரின்படுகொலைகளை நேரில் பார்த்த 11 பேருடன்  பேசிய பின்னர் அவர்கள் தெரிவித்ததை கையடக்க தொலைபேசிகள் மற்றும் புகைப்படங்ககளுடன் ஒப்பிட்;டதாக பிபிசி தெரிவித்துள்ளது.
யின் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் தாக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர் பின்னர் அவர்களின் உடல்கள்  காடுகள் நிறைந்த பள்ளத்தாக்கில் வீசப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
ஆண்களை கையிற்றினால் கட்டிய பின்னர் அவர்களை சித்திரவதை செய்துகொலை செய்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்களால் அதனை பார்க்க முடியவில்லை நாங்கள் எங்கள் தலையை குனிந்து கீழே பார்த்தபடி அழுதுகொண்டிருந்தோம் என  தன்னுடைய உறவினர் ஒருவரை பறிகொடுத்தவர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யவேண்டாம் என மன்றாடினோம்,அவர்கள் அதனை செவிமடுக்வில்லை - பெண்களிடம் உங்கள் கணவர்கள் இதில் இருக்கின்றனரா என கேட்டனர் - கொல்லப்பட்டவர்களில் கணவன்மார்கள் இருந்தால் இறுதிமரியாதையை செலுத்துங்கள் என மியன்மார் படையினர் குறிப்பிட்டனர் எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
படுகொலைகளில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் ஆண்களை கொலை செய்வதற்கு முன்னர் படையினர் கொடுரமான துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.
அவர்களை கட்டி வைத்திருந்தனர் கல்லாலும் துப்பாக்கி முனையாலும் அடித்து நாள் முழுக்க சித்திரவதை செய்தனர் எனஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலைகளில் ஈடுபட்ட படையினரில் சிலர் 17 -18 வயதுடையவர்கள் அவர்களைவிட வயது கூடியவர்களும் பெண் ஒருவரும் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜீ பி;ன் டிவின் கிராமத்தில் ஆழமற்ற மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்த  12 சிதைவடைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த உடல்களில் சிறுவன் ஒருவனின் உடலும் மாற்றுதிறனாளி ஒருவரின் உடலும்காணப்பட்டதாகவும் உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டன எனவும்  பிபிசி தெரிவித்துள்ளது.
60 வயது நபர் ஒருவரின் உடல் பிளம்மரத்தின் கீழ் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது,அவரது உடலின் வீடியோவை ஆராய்ந்தவேளை சித்திரவதைகள் இடம்பெற்றமைக்கான தெளிவான ஆதாரங்கள் காணப்பட்டன என பிபிசி தெரிவி;த்துள்ளது.
ஏனையவர்கள் தப்பியோடிய போதும் தனது வயது காரணமாக படையினர் ஒன்றும் செய்யமாட்டார்கள் என நினைத்து அந்த நபர் அங்கு நின்றார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post