முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கைது! - Yarl Voice முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கைது! - Yarl Voice

முல்லைத்தீவில் உயிரிழந்த சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கைது!முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் தந்தை, தாய் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கைது செய்யப்பட்ட அவரது மைத்துனர் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் ,முன்னர் வெளியாகியிருந்தன.

குறித்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ள நிலையில், தனது மகள் கர்ப்பமாக இருந்ததை அறிந்த தாய் வீட்டில் கருக்கலைப்பு செய்ய முயன்ற போதே சிறுமி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் கருக்கலைப்பு செய்ய முயன்ற போதே சிறுமி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனையில் இறந்தவருக்கு பல பற்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி மூன்று நாட்களின் பின்னர் சடலமாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post