ஊர்காவற்றுறையில் வீடு புகுந்து பெண்கள், மாணவன் மீது பொலிஸார் தாக்குதல் - Yarl Voice ஊர்காவற்றுறையில் வீடு புகுந்து பெண்கள், மாணவன் மீது பொலிஸார் தாக்குதல் - Yarl Voice

ஊர்காவற்றுறையில் வீடு புகுந்து பெண்கள், மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்


 
ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு, தம்பாட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மது போதையில் நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் 17 வயது மாணவன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

பொலிஸாரின் தாக்குதலில் ஒன்றரை வயதுக் குழந்தையின் தாய், பல்கலைக்கழக மாணவி ஆகியோர் பலத்த காயமடைந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்து வீடியோ புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தாக்கப்பட்ட பெண்களின் தாயார் மற்றும் கிராம மக்கள் இணைந்து நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post