ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் மரணம் - Yarl Voice ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் மரணம் - Yarl Voice

ஊட்டி ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் மரணம்கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஊட்டி வெலிங்டன் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி மற்றும் 12 பேர் உயரிழந்தனர்.

அன்று அவர்களுடன் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானப்படை அதிகாரி க்ருப் கேப்டன் வருண் சிங் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

வெலிங்கடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு விமானப்படை கட்டளையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
 
அங்கு தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று சற்று முன்னர் துரதிர்ஷ்டவசமாக வீரமரணம் அடைந்ததாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

க்ருப் கேப்டன் வருண் சிங் தனது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை தனது உயிரை துச்சமாக மதித்து மிக திறமையாக இயக்கி விபத்தில் இருந்து மீட்ட காரணத்தால் ஷவுர்ய சக்ரா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post