ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” - புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து பேட்டி - Yarl Voice ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” - புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து பேட்டி - Yarl Voice

ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்” - புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து பேட்டிஇந்தி படங்களில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புவதாக புதிய பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் எய்லாட் நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த பட்டத்தை பெற்றுள்ளது.

 இந்த நிலையில், எய்லாட் நகரில் இருந்தபடி, ஹர்னாஸ் சாந்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

“என் மீது நம்பிக்கை வைத்து என் மீது பலர் அன்புமழை பொழிந்தனர். அவர்களுக்காக எனது இதயம் முழுவதும் மரியாதை நிரம்பி உள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றியை தொடர்ந்து, என்னை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் விரும்புகிறார்கள். நானும் பெரிய திரையில் எனது திறமையை காட்ட விரும்புகிறேன்.

இந்தி படங்களில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இந்த நூற்றாண்டு மக்கள், திரைப்படங்களாலும், இணைய தொடர்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால், நானும் மக்களை ஈர்ப்பதுடன், சமுதாயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய விஷயங்கள் பற்றி பேச விரும்புகிறேன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post