தமிழர்களின் கலை,பண்பாடு வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் - சிறீதரன் - Yarl Voice தமிழர்களின் கலை,பண்பாடு வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் - சிறீதரன் - Yarl Voice

தமிழர்களின் கலை,பண்பாடு வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் - சிறீதரன்தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  தெரிவித்துள்ளார்.

25.12.2021 அன்று ஆழிப்பேரலை  நினைவாக  கலாலயம் வெளியீடு  செய்த இசைக்கபி கலையக உருவாக்கத்தில் உருவான "விழுதொலிகள்"   இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. 

உண்மை தான் எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள். தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும்.
கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. 

தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. கலைஞர்களும் இந்த மண்ணில் மீளும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்ப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post