அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்னாள் இராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு - Yarl Voice அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்னாள் இராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு - Yarl Voice

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்னாள் இராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு
இலங்கையின் இன்னுமொரு இராணுவ அதிகாரிக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

2009 முதல் 2011 வரை மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகரான மேஜர் ஜெனரல் உதயபெரேராவிற்கே குடும்பத்தினருடன் அமெரி;க்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அவரை யுத்தகுற்ற சந்தேகநபர் என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

டிசம்பர் ஐந்தாம் திகதி உதயபெரேரா தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக குடிவரவு பகுதிக்கு சென்றவேளை அவருக்கு அமெரிக்காவின் தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் எயர்லைன்ஸ் பணியாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களிற்கு அது குறித்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உதயபெரேரா பயணத்தை இரத்துச்செய்துள்ளாhர் ஆனால் அவரது குடும்பத்தவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post