கிளி. ஜெயந்தி நகரில் சடலமாக மீட்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரண விசாரணைகளில் சந்தேகம்! - Yarl Voice கிளி. ஜெயந்தி நகரில் சடலமாக மீட்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரண விசாரணைகளில் சந்தேகம்! - Yarl Voice

கிளி. ஜெயந்தி நகரில் சடலமாக மீட்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரண விசாரணைகளில் சந்தேகம்!ஜெயந்திநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் மரண விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி சம்ப இடத்தை பார்வையிட்டார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் நேற்று (19.12.2021) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் மாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் நேற்று (19) அடையாளம் காணபட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (18) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தது. வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான முன்பள்ளி ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.

சம்பவம் இடம்பெற்ற இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்திருந்தது.

குறித்த மரணம் தொடர்பில் நேற்றைய தினம் (19.12.2021) திடீர் மரணவிசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து குறித்த சடலம் பிசிஆர. பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இன்று பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது.

இந்த நிலயைில் இன்றைய தினம் (20.12.2021) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உடற்கூறற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.

இந்த நிலையில்இ மரண விசாரணைகளின் போது எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து சட்ட வைத்திய அதிகாரி இன்று சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post