மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை வெறும் நாசவேலை -சுகாதார அமைச்சு - Yarl Voice மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை வெறும் நாசவேலை -சுகாதார அமைச்சு - Yarl Voice

மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை வெறும் நாசவேலை -சுகாதார அமைச்சு



இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையானது வெறும் நாசவேலை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய ஐந்து மாவட்டங்களில், சுகாதார அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலைகளுக்கான வைத்தியர்களை நியமிப்பதில் எவ்வித பிரச்சினையும் இடம்பெறவில்லை என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான (மருத்துவ சேவைகள்) வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

உள்ளகப் பயிற்சி நியமனங்களில் சுகாதார அமைச்சரோ அல்லது அமைச்சின் செயலாளரோ எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்த முடியாது. இது முற்றிலும் வெற்றிடப் பட்டியல் மற்றும் சேவைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ அதிகாரியும் சமீபத்தில் நியமனங்கள் செய்யப்பட்ட வெற்றிடப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு, மருத்துவர்களின் வேலைநிறுத்தம் ஒரு நாசகார நடவடிக்கை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post