அருண் விஜய்யின் மகன் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்! - Yarl Voice அருண் விஜய்யின் மகன் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்! - Yarl Voice

அருண் விஜய்யின் மகன் அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்!மூத்த நடிகர் விஜயகுமாரை தொடர்ந்து அவரது மகன் அருண் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

அருண் விஜய்யை தொடர்ந்து அவரது மகன் அர்னவ் அருண் விஜய் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 ஓ மை டாக் படப்பிடிப்பு முடிந்து இப்பொழுது ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.

முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில்
தமிழ் சினிமாவில் இப்போது அசைக்க முடியாத முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தாறுமாறாக ஹிட்டடித்து கல்லா கட்டி வருகிறது. 

இந்த நிலையில் முதல் முறையாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் யானை திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகி வருகிறது

ஓ மை டாக்
நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பல தரமான படங்களை தயாரித்து வருகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், ஜெய் பீம் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது அதில் ஒன்று ஓ மை டாக்.

மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் லீட் ரோலில் நடித்து வருகிறார். விஜயகுமார், அருண் விஜய் ஆகியோரை தொடர்ந்து அர்னவ் படங்களில் அறிமுகமாகிறார்.

 விஜயகுமார், அருண் விஜய், அர்னவ் என மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் நடிப்பதால் இத்திரைப்படம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

டிசம்பர் இறுதியில் ரிலீஸ்
குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

கடந்த சில மாதங்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஓ மை டாக் நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

 அதன்படி டிசம்பர் 30-ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு ஓ மை டாக் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது . இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post