சிவகார்த்திகேயன் சார் நீங்க.. RRR மேடையில் நெகிழ வைத்த ஜூனியர் என்டிஆர்! - Yarl Voice சிவகார்த்திகேயன் சார் நீங்க.. RRR மேடையில் நெகிழ வைத்த ஜூனியர் என்டிஆர்! - Yarl Voice

சிவகார்த்திகேயன் சார் நீங்க.. RRR மேடையில் நெகிழ வைத்த ஜூனியர் என்டிஆர்! RRR படத்தின் Pre release நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் நாயகனான ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "நான் ரொம்ப பேச விரும்பவில்லை, கொஞ்சம் பேசி விட்டு செல்கிறேன் என தொடங்கினார். நான் இங்கு நிறைய பேருக்கு நன்றி கூற வேண்டும்.
என்னை நம்பி இந்த படத்தில் வாய்ப்பு அளித்த ராஜமௌலி சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் வசனம் நானே கூறுவதற்கு மிக முக்கிய காரணம் மதன் கார்க்கி தான். அவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
நன்றி கூறிய ஜூனியர் என்டிஆர்
"நான் ரொம்ப பேச விரும்பவில்லை, கொஞ்சம் பேசி விட்டு செல்கிறேன்" இன்று பேச தொடங்கிய ஜூனியர் என்டிஆர், அனைவர்க்கும் தனது நன்றியை கூறினார். தயாரிப்பாளர்கள் ஆர்.பி சவுத்ரி, தானு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படியே இருங்க
நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனை பற்றிக் கூறும் போது, நான் உங்களை முதல் முதலாகப் பார்க்கிறேன், உங்களைப் பார்க்கும்போது Hardwork, Dedication,Humbleness தெரிகிறது. தயவுசெய்து அப்படியே இருங்கள். மேலும் எங்கள் டீம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் DVV தானையா சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

இவர் தான் காரணம்
இது ஒரு Regional படம் என்பதைத் தவிர்த்து PAN India படமாகிவிட்டது. இவை அனைத்திற்கும் ராஜமெளலி தான் காரணம். அதன்பின் நான் இப்படத்தில் நடித்த ஒவ்வொரு காட்சிகளையும் மறுபடியும் பார்க்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால், ராம்சரண் ஒருவருக்காக என நெகிழ்ச்சியுடன் கூறினார். அனைவரது வாழ்த்தும் எங்களுக்கு தேவை. சிவகார்த்திகேயன் கூறியபடியே அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

சிறந்த இயக்குனர்
பாகுபலி,பாகுபலி 2, நான் ஈ படங்களை இயக்கியவர் தான் எஸ்எஸ் ராஜமௌலி. இவர் தற்போது RRR என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். DVV Entertainment தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். கே கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post