USAID மிஷன் பணிப்பாளரினால் தொழில் பயிற்சி அதிகாரசபைக்கு தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி இன்று கையளிப்பு! - Yarl Voice USAID மிஷன் பணிப்பாளரினால் தொழில் பயிற்சி அதிகாரசபைக்கு தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி இன்று கையளிப்பு! - Yarl Voice

USAID மிஷன் பணிப்பாளரினால் தொழில் பயிற்சி அதிகாரசபைக்கு தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி இன்று கையளிப்பு!




இலங்கை - USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி அளவில் யாழ்ப்பாணம் - கோட்டை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த பேருந்துக்கான அடையாளச் சாவி கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடக்க நிகழ்வாக, நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட  VTA வின் தொழில் பேருந்து ஆனது, உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை, தொழில் சோதனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக இலங்கையின் தென் முனையில் உள்ள தேவேந்திர முனை முதல் வடக்கில் பருத்தித்துறை வரை ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், USAID மிஷன் உயர் அதிகாரிகள், தொழில் பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post