13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்தது.
ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை வீதியின் ஊடாக கிட்டு பூங்காவை சென்றடைந்தது.
கிட்டுப் பூங்காவிற்கு பேரணி சென்று நிறைவடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது, தமிழர் தாயகத்தை சிங்கள - பௌத்தமயமாக்காதே!
வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரி!
தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு!
அரசியல்கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!
வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி!
ஆக்கிரமிப்புப் படைகளான சிறிலங்கா இராணுவத்தை தமிழர் தாயகத்திலிருந்து அகற்று!
தமிழர்களின் நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்து!
எங்கள் கடலில் அந்நிய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்து!
முன்னாள் போராளிகளை சுதந்திரமாக வாழவிடு!
தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுவர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்து! உள்ளிட்ட கோசங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment