சீக்கிரத்துலயே வருதுப்பா கனா காணும் காலங்கள் 2 சீரியல்... ப்ரமோ வெளியீடு! - Yarl Voice சீக்கிரத்துலயே வருதுப்பா கனா காணும் காலங்கள் 2 சீரியல்... ப்ரமோ வெளியீடு! - Yarl Voice

சீக்கிரத்துலயே வருதுப்பா கனா காணும் காலங்கள் 2 சீரியல்... ப்ரமோ வெளியீடு!விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் சீரியலாக ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள்
மெகா ஹிட்டடித்த இந்தத் தொடரின் சீசன் 2 விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனா காணும் காலங்கள் தொடர்
விஜய் டிவியில் பள்ளிக் காலங்களை மையமாக வைத்து ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இன்றுவரை இந்த தொடர் விளங்குகிறது. 

மாணவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்தியது இந்த தொடர்.
பள்ளி மாணவர்கள் வாழ்வியலை மையமாக வைத்து வெளியாகி இந்த தொடர் வெற்றி பெற்றது. 

கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான நடிகர்கள் இன்று சினிமாவிலும் தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். அவர்களின் நடிப்பு இந்த தொடரில் சிறப்பாக அமைந்திருந்தது.

இளம் ரசிகர்களை கவனத்தில் கொண்டு வெளியான இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டது.

 இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாக உள்ளதாகவும் அறிவித்தது.
    
இந்த புதிய தொடரில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் எகிறிய நிலையில், தற்போது தொடரின் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் பின்புலத்தில் சிறப்பான பாடலுடன் மாணவர்கள் உற்சாக ஆட்டம் போடுகின்றனர்.

 இவர்களுக்கு துணையாக அழகான ஆசிரியை ஒருவரும் காணப்படுகிறார்.
இவருக்கு பின்னால் ஒரு அழகான காதலும் காட்டப்பட்டுள்ளது.

 மாணவர்களின் குறும்பிற்கும் ஜாலியான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இந்த பிரமோ உள்ளது. இந்த சீசன் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உலகம் என்பது மிகவும் அழகானது. அதை மிகவும் அழகாக காட்டிய தொடர் கனா காணும் காலங்கள். இந்தத் தொடர் ஒளிபரப்பான காலத்தில் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகவுள்ள புதிய தொடர் வெளியாகும் முன்பே வரவேற்பை பெற்றுள்ளது.

முக்கியமாக இதன் பிரமோ தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்கள், அவர்களுக்குள்ளான புரிதல்கள், சண்டைகள், விருப்பங்கள் என அனைத்தையும் இந்த தொடர்ந்து கொண்டுவரவுள்ளது. மேலும் மாணவர்களின் மனதை அறிந்த ஆசிரியர்களும் இந்த ஹைலைட்டாக உள்ளது தெரிகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post