கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!! - Yarl Voice கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!! - Yarl Voice

கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது!!கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய கொடி ஏற்றப்பட்டு அரச உத்தியுாகத்தர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையினால் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட கரைச்சி பிரதேச சபை கொடி தவிசாளர் வேழமாலிகிதனால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கான சின்னம் மறு சீரமைக்கப்பட்டு இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சின்னத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் உரையாற்றியிருந்தனர். தொடர்ந்து கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு பொதிகளும், சனசமூக நிலையங்களிற்கான பணத்தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தவிசாளர் வேழமாலிகிதன், உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் திலீபன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

#Shritharan | #MP | #KPS |  #Kilinochchi

0/Post a Comment/Comments

Previous Post Next Post