சிங்களவர்களை பாதுகாப்பதே எனது முக்கிய கடமை – அவமானங்களை தாங்கும் மனோபலம் எனக்குள்ளது- ஜனாதிபதி - Yarl Voice சிங்களவர்களை பாதுகாப்பதே எனது முக்கிய கடமை – அவமானங்களை தாங்கும் மனோபலம் எனக்குள்ளது- ஜனாதிபதி - Yarl Voice

சிங்களவர்களை பாதுகாப்பதே எனது முக்கிய கடமை – அவமானங்களை தாங்கும் மனோபலம் எனக்குள்ளது- ஜனாதிபதிஅவமானங்களை தாங்குவதற்கான பலம் தனக்குள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தன்னை அவமதிப்பவர்கள் தான் நாட்டிற்கு ஆற்றிய சேவையில் சிறிதளவை கூட செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய தினம் ,நான் பெரும்பான்மை சிங்களவர்களின் ஜனாதிபதி என்பதை அறிவித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதற்பிரஜையாக தன்னை தெரிவு செய்வதற்காக பல தியாகங்களை செய்த சிங்களவர்களின் பாதுகாப்பும் அவர்களது பாரம்பரியத்தை பாதுகாப்பதும் எனது தலையாய பொறுப்பு என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் தொடர்ச்சியாக அந்த நோக்கத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன் என்பதை நான் விசேடமாக தெரிவிக்கவேண்டும்,நான் பெற்றுக்கொண்ட பௌத்த போதனைகளும்உத்வேகமும் இந்த நாட்டில் ஏனைய மக்கள் சந்தேகமின்றி அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு எனக்கு உதவின எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடம் உலகை ஆக்கிரமித்த பெருந்தொற்றை எங்களால் முற்றாக கட்டுப்படுத்த முடிந்தது என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெருந்தொற்று நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடிகள் காரணமாக சிலர் என்னை அவமதித்தாலும் இது போன்ற அவமானங்களை சம மனதுடன் தாங்கும் வலிமை எனக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அவமதிப்பவர்கள் எனது வாழ்க்கையில் நாட்டிற்கு நான் செய்த சேவையில் சிறிதை கூட செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post