யாழ் பல்கலை பேராசிரியரின் நூல் வெளியீடு - Yarl Voice யாழ் பல்கலை பேராசிரியரின் நூல் வெளியீடு - Yarl Voice

யாழ் பல்கலை பேராசிரியரின் நூல் வெளியீடு



யாழ்ப்பாணப் பலகலைக்கழக மருத்துவ பீடத்தின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலசுந்தரம் முகுந்தன் அவர்களால் படம்பிடிக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட “URBAN BIRD WATCHER” நூல் இன்று வெளிவந்துள்ளது. 

மருத்துவத்துறைக்கு மேலதிகமாகத் தன்னுடைய புகைப்படத் துறை ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தான் எடுத்த 39 உள்ளூர்ப் பறவைகளின் புகைப்படங்களுடன், அவற்றின் விபரங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் பேராசிரியர் கோபாலசுந்தரம் முகுந்தன். 

புகைப்படத்துறையிலும், இயற்கையை நேசிப்பதிலும் தனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் பால் தன்னை ஈர்க்கும் வகையில் தன்னுடைய CanonF 1 ,depth 35 mm புகைப்படக்கருவியை அன்பளித்த தன் தந்தை, கால்நடை மருத்துவர் முத்துசாமி கோபாலசுந்தரத்துக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post