விஜய் டிவி நிகழ்ச்சியில் அர்ச்சனா,சாரா – ஹேட்டர்ஸ்களின் கமெண்டுகளை பார்த்துவிட்டு அர்ச்சனா மகள் போட்ட பதிவு - Yarl Voice விஜய் டிவி நிகழ்ச்சியில் அர்ச்சனா,சாரா – ஹேட்டர்ஸ்களின் கமெண்டுகளை பார்த்துவிட்டு அர்ச்சனா மகள் போட்ட பதிவு - Yarl Voice

விஜய் டிவி நிகழ்ச்சியில் அர்ச்சனா,சாரா – ஹேட்டர்ஸ்களின் கமெண்டுகளை பார்த்துவிட்டு அர்ச்சனா மகள் போட்ட பதிவு90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

90ஸ் ரசிகர்களின் பேவரைட் Vj :
இளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.
– சன் டிவி To ஜீ தமிழ் :
  
‘ச ரி க ம நிகழ்ச்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் பாடும் பாடகர்களுக்கு நிகராக அர்ச்சனாவின் காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கும் பல்வேறு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர்களுக்கும் அர்ச்சனாவின் ஆன்கரிங் மிகவும் பிடிக்கும். மேலும், ஒரு எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாடகர் கார்த்தி, எத்தனை சீசன் வந்தாலும் அர்ச்சனா இல்லமால் ச ரி க ம நிகழ்ச்சி இல்லை என்று பாராட்டி இருந்தார்.

அர்ச்சனா மகள் சாரா :
மேலும், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
‘தாயில்லாமல் நான் இல்லை’ :
அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இருப்பினும் இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் டிவியில் ‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக வந்ததை பார்த்து ஹேட்டர்ஸ்கள் திட்டி தீர்த்தனர்.

ஹேட்டர்ஸ்களுக்கு சாராவின் பதில் :
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ள சாரா ”நானும் என் அம்மாவும் தொகுப்பாளர்கள் ஆக இருப்பதை பார்த்துவிட்டு பல ஹேட் கமெண்டுகள் வருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக என்னை பற்றியும் என்னுடைய அம்மாவைப் பற்றியும் சில பெண்களை அவதூறாக பேசுகிறார்கள். நாங்கள் எங்களுடைய வாழ்வில் அன்பை மட்டுமே வரவேற்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதையெல்லாம் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் உங்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவில்லை. இதுபோல வெறுப்புகளை ஊக்கப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை. எங்களை எப்போதும் போல விரும்புவர்களுக்கு எங்களுடைய அன்பையும் அரவணைப்பையும் கொடுக்கிறோம் உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post