யாழ் போதனாவில் நோயாளியிடம் நூதன திருட்டு! நிர்வாகம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice யாழ் போதனாவில் நோயாளியிடம் நூதன திருட்டு! நிர்வாகம் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழ் போதனாவில் நோயாளியிடம் நூதன திருட்டு! நிர்வாகம் விடுத்துள்ள அறிவித்தல்




யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்றைய தினம் வியாழக்கிழமை , சிகிச்சையின் நிமித்தம் , "எக்ஸ்ரே" எடுப்பதற்காக சென்ற போது , தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் (ஹாண்ட் பாக்) வைத்து சென்றுள்ளார். 

திரும்பி வந்த கைப்பையினை பார்த்த போது , அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று , வைத்திய சாலை நிர்வாகத்திடம் , முறையிட்டுள்ளார். 

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்திய சாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்திய சாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது. 

தினமும் வைத்திய சாலைக்கு பெருமளவானோர் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. 

அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ,வைத்திய சாலை நிர்வாகம் கோரியுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post