பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டமைக்காக சிறிசேனவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - சந்திரிகா - Yarl Voice பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டமைக்காக சிறிசேனவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - சந்திரிகா - Yarl Voice

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டமைக்காக சிறிசேனவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - சந்திரிகாஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் அழித்துவிட்டனர் என அவர்தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என நான் இரண்டு வருடங்களிற்கு முன்னர் விடுத்;த வேண்டுகோளை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள சந்திரிகா குமாரதுங்க அவ்வாறு அந்த கட்சியுடன்கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரக்கட்சி அழிக்கப்பட்டு விடும் என நான் எச்சரித்தேன்-இதனை தெரிவித்தமைக்காக என்னை கட்சியின் மத்திய குழுவிலிருந்து நீக்கினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


இரண்டு வருடங்களிற்கு முன்னர் நான் தெரிவித்ததை தற்போது மைத்திரிபால சிறிசேன திரும்பி சொல்கின்றார்-என தெரிவித்துள்ள சந்திரிகா குமாரதுங்க

 யுத்தத்தின் போது கூட நான் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்தேன்-நாட்டின் இன்றைய நிலை நினைத்துப்பார்க்க முடியாததாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post