எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் தடைப்படலாம் - Yarl Voice எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் தடைப்படலாம் - Yarl Voice

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் தடைப்படலாம்எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படலாம்  என இலங்கை மின்சார சபை சேவைச் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்துள்ளார்.

 இதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்குத் தயாராக வேண்டும் என அவர்  தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி நெருக்கடியின் காரணமாக மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாகவும் மூடப் பட்டுள்ளது.

நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்க வில்லை.

தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவை தற்போது எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post