நல்லூர் ஆலய பரிபாலகர் பற்றிய கைநூல் வெளியீடு - Yarl Voice நல்லூர் ஆலய பரிபாலகர் பற்றிய கைநூல் வெளியீடு - Yarl Voice

நல்லூர் ஆலய பரிபாலகர் பற்றிய கைநூல் வெளியீடு
வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் எழுதிய 'எளிமைமிகு பரிபாலக ஆளுமை' என்ற கைநூல் வெளியீடு 07.01.2022  வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் பரிபாலகர் அமரர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும்விதமாக அமைந்துள்ள இந்த நூலின் வெளியீட்டுக்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை தாங்கவுள்ளார்.

யாழ். மாவட்ட இந்து அமைப்புகளின் ஒன்றிய செயலாளர் இ. இரத்தினசிங்கம் வரவேற்புரையும், நிகழ்வில் நல்லை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் கருத்துரைகளையும், யாழ். மாவட்ட இந்து அமைப்புகளின் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ச. லோகசிங்கம் நன்றியுரையும் ஆற்றுவர்.

நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் கைநூல் இலவசமாக வழங்கப்படும். சுகாதார விதிகளை பின்பற்றி அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post