சிறிலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை உச்சம் பெற்றிருந்த வேளையில் சிறிலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலையில் இருந்து உறவுகளை காக்கக்கோரி 12.02.2009அன்று சுவிஸ் ஜெனிவா ஐ.நா முன்றலில் தன்னைத் தீயில் எரித்து ஈகைச் சாவடைந்த ”ஈகைப்பேரொளி முருகதாசன்” அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரன், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment