பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் யாழில் போராட்டம்! - Yarl Voice பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் யாழில் போராட்டம்! - Yarl Voice

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் யாழில் போராட்டம்!ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் ஏற்பாட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர விநியோகமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றது.

இதன்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை 15,000 ரூபாவால் அதிகரிக்குமாறும்,பதவி உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும், சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில் இணைக்குமாறும், 2016இன் பின்பு அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரி இந்த துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post