யாழில் கெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் பொலிஸாரால் கைது! விசாரணை தீவிரம் - Yarl Voice யாழில் கெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் பொலிஸாரால் கைது! விசாரணை தீவிரம் - Yarl Voice

யாழில் கெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் பொலிஸாரால் கைது! விசாரணை தீவிரம்


கொழும்பில் இருந்து யாழிற்கு கெரோயினை கடத்தி சூட்சபமான முறையில் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணை பெருமளவு கெரோயினுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர்.

கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் யாருக்கும் சந்தேகம் ஏற்படாவண்ணம் கெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து யாழில் உள்ளு}ர் தரகர்கள் மூலம் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டுவந்திருந்தார். உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் தூய கெரோயின் போதைப்பொருளை பல லட்சம் பெறுமதிக்கு விற்பனை செய்து வந்தார்.

குறித்த பெண் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரிற்கு விடயங்கள் கசியத்தொடங்கியதையடுத்து குறித்த பெண்னை தக்கதருணம் பார்த்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இந்நிலையில் வழமைபோல கொழும்பில் இருந்து கெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து யாழில் தரகர்கள் மூலம் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் யாழ் சிரோஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைiமையில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் ராஜரட்ணம் மற்றும் புவீ, சுயந்தன், பிரவீன், சுரேஸ், சந்திரரட்ண, பெண் பொலிஸ் கொஸ்தாபல் வர்ணகுணசூரிய போன்ற உத்தியோகத்தர்கள் குறித்த பெண் நேற்றையதினம் அரியாலை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு  கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய கெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 லட்சம் எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 இதேவேளை கைது செய்யப்பட்ட பெண்ணிடம் கெரோயின் விற்பனையில் ஈடுபடும் உள்ளு}ர் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சமீப நாட்களாக கைதுசெய்யப்பட்டுவந்த நிலையில் பொலிஸாரிற்கு சந்தேகம் ஏற்படாவண்ணம் பெண்களை பயன்படுத்தி குறித்த விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post