வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்! யாழ் போதனா பணிப்பாளர் அறிவிப்பு


வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post