தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! - Yarl Voice தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! - Yarl Voice

தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30ஆம் திகதி முதல் இந்த உத்தரவானது நடைமுறைக்கு வருகிறது. தடுப்பூசி போடாத நபர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் தனி நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர் களுக்கு வழங்கப்படும் விலக்கு சான்றிதழ் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post