அமைச்சர்களும் தியாகம் செய்தனர் -ரமேஷ் பத்திரன - Yarl Voice அமைச்சர்களும் தியாகம் செய்தனர் -ரமேஷ் பத்திரன - Yarl Voice

அமைச்சர்களும் தியாகம் செய்தனர் -ரமேஷ் பத்திரனகடந்த இரண்டு வருடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்த போது அமைச்சர்களும் தியாகங்களைச் செய்ததாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் பல தியாகங்களை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மக்களுக்காக பல திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அனைத்து பிரிவினரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களால் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாவிட்டாலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதாகவும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பொதுமக்களின் ஆதரவையம் அவர் கோரியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post