சவூதி அரேபியாவில் சில வரையறைகளுடன் 'வலன்டைன்ஸ் டே' கொண்டாட அனுமதி! - Yarl Voice சவூதி அரேபியாவில் சில வரையறைகளுடன் 'வலன்டைன்ஸ் டே' கொண்டாட அனுமதி! - Yarl Voice

சவூதி அரேபியாவில் சில வரையறைகளுடன் 'வலன்டைன்ஸ் டே' கொண்டாட அனுமதி!



இன்று வலன்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் பல நாடுகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 90களில் மேலை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்தத் தினம் தற்போது ஆசிய நாடுகள் மத்திய தரைக்கடல் நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது.

கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளிலும் இந்தத் தினம் பிரபலமாகி வருவதால் காதலர்கள் வீதி எங்கும் உலா வர தொடங்கி விட்டனர்.

இவர்களை கவர்வதற்காக உலக நாடுகளில் வியாபாரிகள் பலர் காதலைக் கொண்டாடும் பல பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் சிவப்பு நிறத்திலான உடைகள், பரிசுப் பொருட்கள் என இந்த நாளன்று வியாபாரம் எப்போதும் களை கட்டும்.
இவற்றை காதலர்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவர். சிவப்புநிற ஆர்டின் பொம்மைகள், தலையணைகள், உடைகள் என கடைகள் அனைத்திலும் சிவப்பு நிறப் பொருட்கள் இந்தநாளில் நிரம்பி வழியும். 

சவூதி அரேபியாவில் இந்தத் தினம் கொண்டாட அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு வியாபாரிகளுக்கு சவூதி அரசு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

அங்காடிகளில் இதுபோன்ற சிவப்பு நிற காதலர் தின கொண்டாட்டங்களுக்காக பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர கடையில் எங்கும் வலன்டைன்ஸ் டே என்கிற பதாகை, வாசகம் இடம்பெறக் கூடாது, அந்த வார்த்தையையும் வாடிக்கையாளரிடம் பயன்படுத்தக் கூடாது என வித்தியாசமான ஓர் உத்தரவை விடுத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post