நாட்டின் இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ரணில் - Yarl Voice நாட்டின் இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ரணில் - Yarl Voice

நாட்டின் இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ரணில்நாட்டின் பிரதான தேசிய வளம் மனித வளம் என்பதால் நாட்டின் இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பம் மூலம் இளைஞர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேற வரிசையில் நிற்பதாகவும், டொலர் பற்றாக் குறையே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று நாட்டின் தேசிய வளம் பாதுகாக்கப்பட வேண்டு மெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது பதவிக் காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post