இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் ? ஐக்கியமக்கள் சக்தி கேள்வி - Yarl Voice இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் ? ஐக்கியமக்கள் சக்தி கேள்வி - Yarl Voice

இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் ? ஐக்கியமக்கள் சக்தி கேள்விநாட்டில் உள்ள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என  ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்
ஊடகவியலாளர் சமித்த சமரவிக்ரம வீட்டில் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சமகி ஜன பல வேகய கட்சி என்ற ரீதியில் அத்தாக்குதலை பற்றி கருத்திற் கொள்ளபடுகிறது.

ஏனெனில் நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய சூழ்நிலையில் ஊடக சுதந்திரம் மிக அவசியம். எனவே ஊடகங்கள் பற்றியும் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஊடகவியலாளர் தாம் ஒரு விடயத்தை வெளியே கொண்டு வருவதற்கு  பல முயற்சிகள் மற்றும் தாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணிபுரிகின்றனர்.
அவ்வாறு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு தாக்குதல் சரியான விடயம் அல்ல.

சுதந்திரம் ஊடக சுதந்திரம் என்பது முக்கியமானது. இருப்பினும் இவ்வாறான தாக்குதல் சரியா? மீண்டும் வெள்ளை வேன் சம்பவம் ஆரம்பிக்கவா இதனை செய்கிறார்கள் என்று தோன்றுகின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post