துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்! - Yarl Voice துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்! - Yarl Voice

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!



துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து  மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் நாளையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post