பொது முடக்கத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை: சன்ன ஜயசுமண - Yarl Voice பொது முடக்கத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை: சன்ன ஜயசுமண - Yarl Voice

பொது முடக்கத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை: சன்ன ஜயசுமணதற்போதைய சூழ்நிலையில் நாட்டில் பொது முடக்கம் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எனினும் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் பூஸ்டர் டோஸைப் பெறுவது கொவிட்-19 சவாலை சமாளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post