முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
குறித்த வழிபாட்டில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment