யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்! - Yarl Voice யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்! - Yarl Voice

யார் இந்த காவியா மாறன்? SRH உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்கள்!2022 ஐபிஎல் ஏலத்தில் அணி உரிமையாளர்களின் அடுத்த தலைமுறையினர் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆர்யன் கான், சுஹானா கான் மற்றும் ஜாஹ்னவி மேத்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைராகி வருகிறது. ஷாருக்கானிநிற்கு பதிலாக அவரது மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் ஆகியோர் பங்கேற்றனர். அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் கலந்து கொண்டார்.  தற்போது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.  ​​​ஏல மேசையில் காவியா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கூகுள் தேடல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் 'யார் காவியா மாறன்' மற்றும் 'எஸ்ஆர்ஹெச் உரிமையாளர் யார்' போன்ற கேள்விகள் தேடப்பட்டு உள்ளன.
30 வயதான காவியா மாறன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இயக்குனர் டாம் மூடி மற்றும் முத்தையா முரளிதரனுடன் ஏலத்தில் கலந்து கொண்டார். எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன், மீடியா அதிபர் கலாநிதி மாறனின் மகள் ஆவார்.

    அவர் சன் மியூசிக் மற்றும் இதர சன் நிறுவனத்தின் சேனல்களை பார்த்து வருகிறார்.  காவியா ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், SRHன் ஐபிஎல் போட்டிகளின் போது அவர் முதன்முதலில் காணப்பட்டார். ​​அப்போதே ட்ரெண்டிங்கில் இருந்தார் காவியா. 2019 ஏலத்தின் போது காவியா உடனிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post