105 ஆவது பொன் அணிகளின் போர் இன்று சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில்.. - Yarl Voice 105 ஆவது பொன் அணிகளின் போர் இன்று சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில்.. - Yarl Voice

105 ஆவது பொன் அணிகளின் போர் இன்று சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில்..



வடக்கின் பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி இன்று வெள்ளிக்கிழமை சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களும் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிக்கான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இடம் பெற்றது.


இவரிடம் 2022-ல் 105 ஆவது வருட போட்டியாக இடம்பெறவுள்ள நிலையில்  எதிர்வரும் 18ஆம் திகதி 29 ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியும், எதிர்வரும் 21ஆம் திகதி 20 ஓவர்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 32  தடவையும் யாழ்ப்பாண கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.

ஒருநாள்  மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 21 தடவைகளும் 6 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியில் வெற்றி பெற்றுள்ளன.

 பொன் அணிகளின் போரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு ஆ.எப் டெஸ்வினும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு என். விஷ்ணுகந்தும் தலைமை தாங்குகின்றனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post