உக்ரைனில் ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதல் அல்லது உயிரியல் ஆயுத தாக்குதல்களில் ஈடுபடலாம் - வெள்ளை மாளிகை எச்சரிக்கை - Yarl Voice உக்ரைனில் ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதல் அல்லது உயிரியல் ஆயுத தாக்குதல்களில் ஈடுபடலாம் - வெள்ளை மாளிகை எச்சரிக்கை - Yarl Voice

உக்ரைனில் ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதல் அல்லது உயிரியல் ஆயுத தாக்குதல்களில் ஈடுபடலாம் - வெள்ளை மாளிகை எச்சரிக்கை
உக்ரைனில் ரஷ்யா இரசாயன ஆயுத தாக்குதல் அல்லது உயிரியல் ஆயுத தாக்குதல்களில் ஈடுபடலாம்  என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் -மற்றும் உக்ரைனில் இரசாயன ஆயுத முயற்சி குறித்து ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானது என வெள்ளை மாளிகையின் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட தூண்டப்படாத தனக்கு தாக்குதலகளை நியாயப்படுத்துவதற்காக ரஸ்யா இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்குலக அதிகாரிகளும் ரஸ்யா இரசாயன - உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

ரஸ்யா மரபுசாராத ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தாங்கள் அச்சமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா அனேகமாக இரசாயன ஆயுதங்களையே பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள அவர்கள் அதேவேளை சிறியளவு அணுவாயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாங்கள் கரிசனைகொள்வதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன என மேற்குலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா மோதலில் ஈடுபட்ட ஏனைய இடங்களில் குறிப்பாக சிரியாவில் - ரஸ்யாவின் சகாக்கள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post