வவுனியாவிலிருந்து மேலும் பத்து பேர் படகில் தமிழகத்தில் தஞ்சம்! இதுவரை 16 பேர் சென்றதால் பாதுகாப்பு தீவிரம் - Yarl Voice வவுனியாவிலிருந்து மேலும் பத்து பேர் படகில் தமிழகத்தில் தஞ்சம்! இதுவரை 16 பேர் சென்றதால் பாதுகாப்பு தீவிரம் - Yarl Voice

வவுனியாவிலிருந்து மேலும் பத்து பேர் படகில் தமிழகத்தில் தஞ்சம்! இதுவரை 16 பேர் சென்றதால் பாதுகாப்பு தீவிரம்



யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக  தமிழகத்தில்  தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடி க்கு  வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்று உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான  பால் பவுடர்,  அரிசி, பருப்பு, கோதுமை   மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து  தனது சொந்த  பைபர் படகில்  ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர்  தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர். 

நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட  பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி  சுமார்  37 மணி நேரத்திற்கும் மேலாக  குழந்தைகளுடன் நடுக்கடலில்  தத்தளித்தளித்த நிலையில்  பல மணி நேர  முயற்சிக்கு பின் இஞ்சின்  சரி செய்து செவ்வாய்கிழமை  இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்

இலங்கை நடந்த  உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு  தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின்  2012ல் மீண்டும்  இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து  குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக  அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்ககை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை  16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும்  என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த  கடல் பாதுகாப்பு அதிகரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய  தகவல் தெரிவிக்கின்றன

0/Post a Comment/Comments

Previous Post Next Post