ஜனாதிபதி - கூட்டமைப்பினர் பேச்சு திடீரென ஒத்திவைப்பு! 25இல் நடைபெறும் என அறிவிப்பு - Yarl Voice ஜனாதிபதி - கூட்டமைப்பினர் பேச்சு திடீரென ஒத்திவைப்பு! 25இல் நடைபெறும் என அறிவிப்பு - Yarl Voice

ஜனாதிபதி - கூட்டமைப்பினர் பேச்சு திடீரென ஒத்திவைப்பு! 25இல் நடைபெறும் என அறிவிப்புஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த பேச்சு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலகத்தால், கூட்டமைப்பின் தலைமைக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post