இறந்த தாயாருக்கு சவப்பெட்டி வாங்க பணமின்றி யாசகம் பெறச் சென்ற பெண் - Yarl Voice இறந்த தாயாருக்கு சவப்பெட்டி வாங்க பணமின்றி யாசகம் பெறச் சென்ற பெண் - Yarl Voice

இறந்த தாயாருக்கு சவப்பெட்டி வாங்க பணமின்றி யாசகம் பெறச் சென்ற பெண்இறந்த தாயின் சடலத்தை  சவப்பெட்டியில் எடுத்துச் செல்வதற்காக யாசகம் பெறச் சென்ற பெண்ணொருவர் தொடர்பில் ஜா-எல தெவாலேகம பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் இறந்து போன தனது தாயின் சடலத்தை துணியால் மூடி, விளக்கை ஏற்றிவிட்டு கதவை மூடிவிட்டு குறித்த பெண் பணம் தேடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 76 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளைய மகள் தாயுடன் தனியாக வசித்து வந்த நிலையில், கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் தாயைக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post