பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; 4 பிள்ளைகளின் தந்தை தற்கொலை - Yarl Voice பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; 4 பிள்ளைகளின் தந்தை தற்கொலை - Yarl Voice

பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; 4 பிள்ளைகளின் தந்தை தற்கொலைவெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொருளாதார பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

வெலிபென்ன - ஹோலின்போன் கொலனியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவரைக் காணவில்லை என அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள இறப்பர் தோட்டத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், மூன்று நாட்களாக குழந்தைகள் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்கவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.

கணவன் கூலி வேலை செய்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மனைவி விசாரணையில் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும், பின்னர் வீட்டிலுள்ள சில பொருட்களை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொண்டு வந்ததாகவும், பணப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் மனைவி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post