ஆசிரியர் நியமனத்தை 45 வயதாக அதிகரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரிடம் கோரிக்கை! - Yarl Voice ஆசிரியர் நியமனத்தை 45 வயதாக அதிகரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரிடம் கோரிக்கை! - Yarl Voice

ஆசிரியர் நியமனத்தை 45 வயதாக அதிகரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரிடம் கோரிக்கை!
ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கும் வயதெல்லையை 45வது அதிகரிக்குமாறு கோரி நேற்றைய தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்று கூடி மஜகரை கையளித்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில் 2020 ஆம் ஆண்டு பட்டதாரி உணர்வுகளாக ஆசிரியர் களாக உள்வாங்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்து உள்ளோம்.

தற்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரச பாடசாலைகளில் உள்ளீர்ரக்கும் வயதிலை 35 ஆக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாம் ஆசிரியர்களாக தொடர்ந்தும் சேவையாற்றுவதிலே விருப்பம் தெரிவித்து உள்ளோம் அதேநேரம் எமது கல்வி நிலை தொடர்பில் போட்டிப்பரீட்சை ஒன்றை வைத்து எமது நிலைகளை அறிய முடியும்.

ஆகவே வட மாகாண ஆளுநரை முன்பு சந்தித்த போது நீங்கள் எந்தத் துறையில் சேவையாற்ற விரும்புகிறீர்களோ அதே துறையில் நியமிக்க முடியும் என உறுதிமொழி வழங்கி இருந்தார்.

ஆகவே தான் தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வயதெல்லையை 45 ஆக உயர்த்தி ஆசிரியர்களுக்கான  நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post